சென்னை:மணிப்பூர் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (ஜூலை 30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான், "மணிப்பூரில் குக்கி மக்களுக்கு எதிராக ஒரு வன்முறையை கட்டவிழ்த்து விடப்பட்டதை நாம் பார்க்கிறோம். இதற்கு, நடவடிக்கை எடுக்காத மத்திய பாஜக அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
இணையதளத்தை முடக்காமல் இருந்திருந்தால் இன்னும் நிறைய வீடியோக்கள் வெளியாகி இருக்கும் எனவும் அதனால் தான் இணையதளத்தை முடக்கினோம் என அம்மாநில முதலமைச்சர் கூறுகிறார். வருவதற்கு முன்பே தடுக்காமல், நடந்ததை மறைப்பதா?. மணிப்பூரில் குக்கி இன மக்கள் வாழும் மலைப்பகுதிகளில் இருக்கக் கூடிய வளங்களுக்காகத்தான் இந்தச் சம்பவம் நடக்கிறது.
மைதேயி இன மக்கள் பாஜகவின் வாக்காளர்களாக இருக்கின்றனர். குக்கி இன மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். இதனால், பாஜக அரசு இதை அலட்சியப் போக்குடன் பார்க்கிறது. மனிதனுடைய இழப்பை மதமாக பார்ப்பது மானுடம் கிடையாது. எங்கு மக்கள் கொல்லப்பட்டாலும் தமிழர்களாகிய நாங்கள் கண்ணீர் விடுகிறோம். ஏனென்றால் நாங்களும் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்கள்.
இதையும் படிங்க:"திமுகவை தோற்கடிப்பது தான் நமது இலக்கு" - முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி