தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சக்ரா’ பட ஓடிடி வெளியீட்டு விவகாரம்: விஷால் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு...! - சக்ரா படம்

‘சக்ரா’ படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Seeking stay for actor visuals chakra movie in OTT, notice to Vishal, MHC
Seeking stay for actor visuals chakra movie in OTT, notice to Vishal, MHC

By

Published : Sep 22, 2020, 9:33 PM IST

சென்னை:‘சக்ரா’ படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் - நடிகை தமன்னா நடிப்பில் வெளியான "ஆக்‌ஷன்" என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் எட்டு கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித் தருவதாகக்கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாகக்கூறப்படுகிறது. இதற்கிடையே இயக்குனர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு கதையை சொல்லி அதைப் படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் ’சக்ரா’ என்ற படத்தை இயக்குனர் ஆனந்தன் இயக்கி வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.

சமீபத்தில் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குனர் ஆனந்தன், நடிகர் விசாலை வைத்து சக்ரா என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும், 8.29 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதில், ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, விஷால் தர வேண்டிய 8.29 கோடி ரூபாய் பணத்துக்கான உத்தரவாதம் வழங்கும்படி விஷாலுக்கு உத்தரவிடவும் கோரியுள்ளார். இதேபோல தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து வேறு நபருக்கு படமெடுக்க ஆனந்தனுக்கு தடைவிதிக்கவும், உத்தரவாத தொகையாக 1 கோடி ரூபாயை செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும் மற்றொரு வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ட்ரைடெண்ட் ஆர்டஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், ஓடிடி தளத்தில் படம் வெளியாக இருப்பதால் குறுகிய காலத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதையடுத்து வழக்குகள் குறித்து செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, நடிகர் விஷாலுக்கும், இயக்குனர் ஆனந்தனுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க...'பால் குடிக்கும் குழந்தை சூர்யா' - ராதாரவி கிண்டல்

ABOUT THE AUTHOR

...view details