நீட் தேர்வு சச்சரவுக்கு இடையே அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தங்களுக்கு முதுகலை படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவந்தனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு: ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்!
12:31 October 21
மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து, 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் பதிலளித்தது. இதனிடையே, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி. கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதில், சில திருத்தங்கள் கோரி ஆளுநர் அதனை திருப்பி அனுப்பி வைத்தார்.
கடந்த செப்டம்பர் 15ஆம், மசோதா சில திருத்தங்களுடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், தற்போது வரை அதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராடா தயாராக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் முன் வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.