தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெட்ரோ ரயிலில் மாதம் முழுவதும் பயணிக்க அதிரடி சலுகை அறிவிப்பு! - சீசன் டிக்கெட்

சென்னை: பயணிகள் ரூ. 2500க்கு மாதாந்திர சீசன் டிக்கெட் எடுத்துக் கொண்டு மாதம் முழுவதும் எத்தனைமுறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

1

By

Published : Mar 16, 2019, 7:44 PM IST

சென்னை விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டைக்கும், பரங்கி மலையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. 45 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெறும் இந்த போக்குவரத்தில் தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள்.

பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முதற்கட்டமாக, பயணிகளிடம் ரூ.150 பெற்றுக் கொண்டு ஸ்மார்ட் கார்டுகொடுக்கப்பட்டது. இதில் ஸ்மார்ட் கார்டுக்கு ரூ.50 பிடித்தம் செய்து, மீதம் ரூ.100 யில் ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று அறிவித்தது.

தற்போது ஒருநாள் பயண அட்டையை தொடர்ந்து, மாதாந்திர பயண அட்டையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ.2500 ரூபாய் செலுத்தி இந்த அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.மேலும், முன்பணமாக ரூ.50 செலுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு மாதம் முழுவதும் எந்த நேரத்திலும், எந்த மெட்ரோரயில் நிலையத்திலிருந்தும்எத்தனை முறை வேணுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம்.

இந்த அறிவிப்பு, அலுவலக வேலைக்குச் செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சீசன் டிக்கெட்டை ரீசார்ஜ் செய்யும் வசதியும் உண்டு என்று மெட்ரோ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details