சென்னை ஆவடிக்குட்பட்ட கோயில் பதாகையில் வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதில் இரண்டு அடுக்கில் வீடுகட்ட அவர் கட்டட அனுமதி பெற விண்ணப்பத்திருந்தார். இதனை தொடர்ந்து வெங்கடேசனுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கட்டட அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர் ஆவடி மாநகராட்சி அலுவலர்கள் அங்கு ஆய்வு செய்தபோது வெங்கடேசன் அரசு அனுமதித்த எந்தவொரு நெறிமுறைகளையும் பின்பற்றாமல் கட்டடம் கட்டியிருப்பது தெரியவந்தது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் வெங்கடேசனுக்கு ஆவடி நகரமைப்பு அலுவலர்கள் 2 முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.