தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 31, 2020, 3:05 PM IST

ETV Bharat / state

"பக்ரீத் தினத்தில் மாடுகளை வெட்டக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை"- எஸ்.டி.பி.ஐ

சென்னை: பக்ரீத் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் மாடுகளை வெட்டக்கூடாது என்று எந்த உத்தரவையும் காவல் ஆணையர் பிறப்பிக்கவில்லை என எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில செயலாளர் அமீர் ஹம்சா தெரிவித்துள்ளார்.

SDPI State Secretary explanation on cow sacrifice
SDPI State Secretary explanation on cow sacrifice

சமூக வலைதளங்களில் பக்ரீத் பண்டிகை தினத்தில் இஸ்லாமியர்கள் மாடுகளை அறுக்கக்கூடாது என காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்ததாக போலியான தகவல் பரவியது.

இதையடுத்து சென்னை காவல் ஆணையரை சந்தித்து எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில செயலாளர் அமீர் ஹம்சா விளக்கம் கேட்டுள்ளனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சென்னையில் பக்ரீத் பண்டிகை நாளில் மாடுகளை வெட்டக்கூடாது என எந்த விதமான உத்தரவையும் காவல் ஆணையர் பிறப்பிக்கவில்லை.

பொதுவெளியில் மட்டுமே பிராணிகளை வெட்ட தடை போடப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள் பிராணிகளை வெட்ட வாங்கி செல்லும்போது சில விஷமிகள் தடுத்து பிரச்னை செய்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒட்டகத்தை மட்டுமே வெட்ட தடை உள்ளது. அதனை இஸ்லாமியர்கள் ஒருவரும் வெட்ட போவதில்லை" என்றார்

இதையும் படிங்க... பக்ரீத் எதிரொலி - சந்தையை திறக்க கோரி ஆடுகளுடன் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details