சென்னை: விருச்சிக ராசிக்காரர்களே, நீங்கள் விஷயங்களை மறைத்து வைப்பதில் வல்லவர்கள். இந்த ஆண்டு இந்த பண்பிலிருந்தே நீங்கள் லாபம் பெறலாம். மறைமுகமான இலக்குகளை இரகசியமாக வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம். ஒரு அற்புதமான ஆண்டில் அடியெடுத்து வைக்கிறீர்கள். மற்றவர்களை ஈர்க்கும் வசியம் உங்களிடத்தில் இருப்பதால் மக்கள் உங்களிடம் ஈர்க்கப்பட்டு ரசிகர்களாகக்கூட மாறுவார்கள்.
இதன் மூலம் ஒரு பெரிய வேலையைச் செய்து முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த ஆண்டு உயர்வு தாழ்வு இருக்கலாம். அடிக்கடி அதிகமாகப் பேசுவீர்கள், இது மற்றவர்களுக்கு எரிச்சலூட்டலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படலாம். ரியல் எஸ்டேட் வாங்க விரும்பினால் இந்த ஆண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தின் அடிப்படையில் சமூகத்தில் உங்கள் நிலை உயரக்கூடும்.
கடின உழைப்பால் மட்டுமே தொழிலிலும் வியாபாரத்திலும் வெற்றி என்பது கிடைக்கும். இந்த ஆண்டு மே மாதத்திற்குள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் கைகூடும். காதல் திருமணம் செய்ய போராடுபவர்களும் வெற்றியடைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். சில சமயங்களில் தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டும்.