தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு... 3 வருடத்திற்குப் பிறகு தனது சேவையைத் தொடங்கிய ஸ்கூட் ஏர்லைன்ஸ்! - chennai singapore way airline

Scoot Airlines: கரோனா வைரஸ் ஊரடங்கு பாதிப்பு காரணமாக சென்னை- சிங்கப்பூர் இடையே தனது சேவையை ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நிறுத்திய நிலையில், மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தனது சேவையைத் தொடங்கியுள்ளது.

Scoot Airlines has resumed service from Chennai to Singapore after 3 years
3 வருடத்திற்கு பிறகு ஸ்கூட் ஏர்லைன்ஸ் சேவை மீண்டும் தொடக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 4:56 PM IST

சென்னை: சிங்கப்பூர் சிறந்த சுற்றுலா தளமாக இருப்பதாலும், அங்கிருந்து ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நேரடி இணைப்பு விமானங்கள் இருப்பதாலும், சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

இதுவரை நாள் ஒன்றுக்கு 6 விமானங்கள் சென்னை - சிங்கப்பூருக்கும் மறுமார்க்கமாக சிங்கப்பூர் - சென்னை இடையே 6 விமானங்கள் என்று மொத்தம் நாள் ஒன்றுக்கு 12 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது.

இந்த நிலையில் நேற்று (நவ.5) நள்ளிரவில் இருந்து, கூடுதலாக சிங்கப்பூர் - சென்னை மறுமார்க்கமாக சிங்கப்பூர் - சென்னை இடையே, ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இருந்து 158 பயணிகளுடன் புறப்பட்டு, நள்ளிரவு 11:50 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது.

அதே விமானம் சென்னையில் இருந்து நள்ளிரவு 12:35 மணிக்கு 131 பயணிகளுடன் சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்ல வேண்டிய விமானம், முதல் நாளில் தாமதமாக, இன்று (நவ.6) அதிகாலை 1:42 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. ஸ்கூட் ஏர்லைன்ஸ் தினசரி விமானங்களாக இயக்கப்படுகிறது.

இதனால் சென்னை - சிங்கப்பூர் மறுமார்க்கமாக சென்னை இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 12 லிருந்து 14 ஆக அதிகரித்துள்ளது. இப்போது புதிதாகச் சென்னைக்கு விமான சேவையைத் தொடங்கியுள்ள ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஏற்கனவே சிங்கப்பூர்- சென்னை- சிங்கப்பூர் இடையே இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.

அதன் பின்பு கரோனா வைரஸ் தாக்கம் குறைந்ததும், தமிழ்நாட்டில் திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு இந்த விமான நிறுவனம், விமான சேவையைத் தொடங்கி நடத்தி வந்தது. ஆனால், சென்னைக்கு மட்டும் தனது சேவையைத் தொடங்காமல் இருந்தது. இப்போது சுமார் மூன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பின்பு, மீண்டும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சிங்கப்பூர் - சென்னை - சிங்கப்பூர் இடையே தனது விமான சேவையை தொடங்கியுள்ளது. இது விமான பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:வேலூரில் ஹைடெக் வசதிகளுடன் கூடிய அரசுப் பள்ளி..! கல்வியை சுகமாய் அனுபவிக்கும் மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details