தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரியில் ஜி20 அறிவியல் மாநாடு தொடங்கியது - புதுச்சேரி செய்திகள்

ஜி20 மாநாட்டின் ஒரு அங்கமான அறிவியல் மாநாடு புதுச்சேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 11 நாடுகளை சேர்ந்த 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.

புதுச்சேரியில் ஜி20 அறிவியல் மாநாடு தொடங்கியது
புதுச்சேரியில் ஜி20 அறிவியல் மாநாடு தொடங்கியது

By

Published : Jan 30, 2023, 12:50 PM IST

புதுச்சேரி: ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தியா முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் இன்று ஜி20 (Science 20) மாநாடு துவங்கியது. இதில் 11 நாடுகளைச் சார்ந்த 15 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

வெளிநாட்டு விருந்தினர்களை தங்க வைக்க 2 நட்சத்திர விடுதிகளும், சின்ன வீராம்பட்டினம் பீச் ரெசார்ட் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தங்கவைக்கப்பட்டுள்ள அனைத்து பிரதிநிதிகளும் மாநாடு நடைபெறும் 100 அடி சாலையில் உள்ள சுகன்யா அரங்கிற்குப் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

அனைவரும் 9.15 மணிக்கு அரங்கிற்கு வர மாநாடு 9.30 மணிக்குத் துவங்கியது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் மாநாடு நடக்கிறது. காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை மாநாடு நடக்கிறது. மாநாட்டை ஒட்டி பிரதிநிதிகள் தங்கும் தங்கும் விடுதிகள், விமான நிலையம், மாநாட்டு அரங்கம் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நகர பகுதிகளிலும் காவல்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மாநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்கும் விதமாக நகர் முழுவதும் விதவிதமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக யாருக்கு ஆதரவு?

ABOUT THE AUTHOR

...view details