திருச்சி: இன்று (அக்.2) திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள உப்பு சத்தியாகிரகம் நினைவுத் தூணில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்திற்கு, அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, காந்தி ஜெயந்தி, 75ஆவது ஆண்டு விடுதலை நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டத்தினை, மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் அன்பில் மகேஷ் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் அன்பில் மகேஷ் கூறுகையில்,