கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் சரிவர நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் வழக்கம் போல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளித்தனர்.
பள்ளிகள் திறப்பால் மாணவர்கள் உற்சாகம்! கரோனா விதிகளை பின்பற்றி வகுப்புகள் - Classes conducted by following corona rules
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்லும் முன் உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.
students happy
முதல் நாள் வழிபாடு நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடிய பிறகு மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு திரும்பியது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு! மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு