சென்னை: தமிழ்நாட்டில் பிப். 19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், சில வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் வாக்குப்பதிவு தடைபட்டது.
இந்நிலையில், இன்று (பிப். 21) ஐந்து வார்டுகளில் உள்ள, ஏழு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.