தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கனமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நேற்று சில மாவட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கனமழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட எட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! - சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்றும் தொடர்ந்து நள்ளிரவு முதல் கனமழை பெய்வதின் காரணத்தினால் இரண்டாவது நாளாக சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை , புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: மனுஷன் இந்த அரிசியை திம்பானா...? ரேசன் அரிசியை சாலையில் கொட்டிய முதியவர்..!