தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல புதுச்சேரி, காரைகால் உள்ளிட்ட பகுதிகளிலும் அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழ்நாட்டில் மழை நிலவரம்
தமிழ்நாட்டில் தொடர் கனமழை காரணமாக நான்கு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செப் 1) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருவள்ளூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உரிமையாளர் கண்முன்னே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள்