சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு திட்டமிட்டது. இதனிடையே ஜனவரி 26ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ’10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்,
தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - பள்ளி கல்லூரிகள் திறப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு
இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க உத்தரவிட்டார். அத்துடன் பொது சுகாதாரத் துறை வெளியிட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் இன்று முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படவிருக்கிறது.
இதையும் படிங்க:பள்ளி,கல்லூரிகள் திறப்பு: மாணவர்களே நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை!