சென்னை:தமிழ்நாட்டில் நேற்று (நவ 1) முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. முக்கியமாக வட தமிழ்நாடு மற்றும் தென் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை - TN Rain
தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக 9 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு