தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாடத்திட்டம் குறைப்பு குறித்து ஆலோசனை - school syllabus reduce

பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர், அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பாடத்திட்டம் குறைப்பு குறித்து ஆலோசனை
பாடத்திட்டம் குறைப்பு குறித்து ஆலோசனை

By

Published : Aug 12, 2021, 1:54 PM IST

சென்னை: கரோனா தொற்றை கருத்தில்கொண்டு பாடத்திட்டங்களை 100 விழுக்காடு அளவிற்கு நடத்த முடியாது என்பதால், கடந்த ஆண்டு 50 விழுக்காடு வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டிலும் இரண்டரை மாதங்களாகப் பள்ளிகளில் நேரடி முறையில் வகுப்புகள் திறக்காத நிலையில், ஆன்-லைன் வழியில் மட்டுமே பாடம் நடத்தப்பட்டுவருகிறது.

மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கருத்தில்கொண்டு இந்த ஆண்டும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னையில் துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் பாடத்திட்டம் குறைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா உள்ளிட்ட அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார்சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 12) ஆலோசனையில் ஈடுபட்டார்.

விரைவில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்புவரை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் குறைத்து முதலில் அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: 'தயார் நிலையில் பள்ளிகள்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

ABOUT THE AUTHOR

...view details