தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பர்கள் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்! - சிறுவன் பலி

சென்னை: கொரட்டூர் அருகே கோயில் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் நண்பர்கள் கண் முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

school_student drowned in pond death in chennai
school_student drowned in pond death in chennai

By

Published : Dec 9, 2020, 6:30 AM IST

சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூரில் உள்ள திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மகன் தினகரன் (12). இவர், இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்துவந்தார்.

இந்நிலையில், தினகரன், தனது நண்பர்களுடன் கொரட்டூர், சாவடி தெருவில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில் குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, தினகரன் குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்ததாக கூறப்படுகிறது.

அவருக்கு நீச்சல் தெரியாததால் ஆழத்திலிருந்து கரைக்கு வர முடியாமல் தத்தளித்து நீரில் மூழ்கத் தொடங்கினார். இதனைப் பார்த்த, நண்பர்கள் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளனர். அவர்கள் வருவதற்குள் தினகரன் நீரில் மூழ்கினார். இதனையடுத்து, பொதுமக்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் குளத்துக்குள் இறங்கி சடலத்தை மீட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த கொரட்டூர் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டு வேலை செய்யும்படி திட்டிய பெற்றோர்... பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!

ABOUT THE AUTHOR

...view details