தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலத்தை அபகரிக்க முயன்ற பள்ளி தாளாளர் கைது - பள்ளி தாளார் கைது

சென்னை: நிலத்தை அபகரிக்க முயன்ற பள்ளி தாளாளரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது
கைது

By

Published : Feb 10, 2021, 1:24 PM IST

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா (40). இவர் 2000ஆம் ஆண்டு பள்ளிகரணை ராம்நகர் தெற்கு விரிவாக்கம் பகுதியில் 4 கோடி ரூபாய் மதிப்புடைய 9,600 சதுர அடி நிலத்தினை தென் சென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ளார்.

இந்த நிலையில் பஞ்சமூர்த்தி (45) என்பவர் சுஜாதாவைப் போல் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரித்துள்ளார். இதனால் பஞ்சமூர்த்தி மீது காவல் ஆணையரிடம் சுஜாதா புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பள்ளிகரணை ராம்நகர் பகுதியை சேர்ந்த பஞ்சமூர்த்தியை கைதுசெய்தனர்.

இதன்பின் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் மடிப்பாக்கம் ராம் நகர் விரிவாக்கத்தில் இயங்கி வரக்கூடிய ஆதித்யா வித்யாலயா பள்ளியின் தாளாளர் என்பதும் சுஜாதாவைப் போல் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரித்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து பஞ்சமூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.1,137 கோடி மோசடி - 4 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details