தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெரும் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. செப்-23ஆம் தேதி இந்த தேர்வு முடிந்த பின்னர் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
தீர்ந்தது காலாண்டு விடுமுறை குழப்பம் - பள்ளிக்கல்வித்துறை விளக்கம் ! - விடுமுறை ரத்து
சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை ஏற்கனவே அறிவித்தபடி அளிக்கப்படும், காந்தியின் 150 வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் விரும்பினால் கலந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆனால், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவை, சிறப்பாக கொண்டாடுவதற்கு, வரும் 23 ஆம் தேதி முதல், அக்டோபர் 2ம்தேதி வரை பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்த அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, காந்தியை மையமாகக் கொண்டு கட்டுரை, நாடகம், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தாண்டு காலாண்டு விடுமுறை உண்டா இல்லையா என மாணவர்கள்,ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களில் விடுமுறை ரத்து என தகவல் பரவியது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தபடி காலாண்டு தேர்வு விடுமுறை உண்டு. பள்ளிகளில் நடைபெறும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் விருப்பமுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் கட்டாயம் கிடையாது, மேலும் காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என்றும் தெரிவித்துள்ளார்.