தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TN School Leave: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு: எவ்வளவு நாள் தெரியுமா? - 1 to 9 std summer leave

தமிழ்நாட்டில், மாநில கல்வி திட்டத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடுவது குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

school leave
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

By

Published : Apr 7, 2023, 9:50 AM IST

Updated : Apr 7, 2023, 12:21 PM IST

சென்னை:பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மூன்றாம் தேதியுடனும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதியுடன் முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வை இம்மாதம் 24 ஆம் தேதி துவங்கி, மாத இறுதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. ஆனால் அதிக வெயில் காரணமாக தற்போது தேர்வுகளை முன்கூட்டியே நடத்த சில மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தேதியில் இந்த தேர்வுகள் துவங்கி, ஒரு வாரத்தில் முடிவடையும் வகையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அட்டவணையை வெளியிட்டுள்ளனர். அதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் 11 ஆம் தேதி துவங்கி, 24 ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன.

சென்னை மாவட்டத்தில் வரும் 18 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என தெரிகிறது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை ஆணையர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குனர் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21 ஆம் தேதிக்குள் ஆண்டு இறுதித் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.

4 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிக்குள் தேர்வை நடத்திட வேண்டும். தமிழ்நாட்டில் பள்ளி கடைசி வேலை நாள் ஏப்ரல் 28" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறையில் நிரந்தர ஆசிரியர் பணி இல்லாமல் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளி இறுதி வேலை நாள் வரை பணிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. தற்போது வெயில் தாக்கும் அதிகம் இருக்கும் காரணத்தால் அது குறித்து பரிசீலித்து மாணவர்களின் நன்மை கருதி முன்கூட்டியே தேர்வு நடத்தி விடுமுறை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ பொய்யாமொழி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்ட நாட்காட்டி அடிப்படையிலேயே ஆண்டு முழுவதும் 210 வேலை நாட்களுக்கு பள்ளி வகுப்புகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறை மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை காலத்தில் ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் விடுமுறை ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது. அதனை மாற்றி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சியை கோடை விடுமுறையில் வழங்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: வேலூரில் மேம்பாலம்? எம்.எல்.ஏ. ஆதங்கத்தில் பேசுகிறார்! அமைச்சர் எ.வ.வேலு கூறியது யாரை?

Last Updated : Apr 7, 2023, 12:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details