சென்னை:தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியின் பொழுது, நீட் தேர்விற்கு நேரடியாக பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டது. அதனால் நீட் தேர்வினை, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே பயிற்சி பெற்று எழுதிய மாணவர்கள் அதிக அளவில் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து கரோனா பெருந்தொற்று காலத்திலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்டாலும், நேரடியாகவும் பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டன. பின்னர் 2021- 22ஆம் கல்வியாண்டில் கரோனா தொற்று குறைந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட்டது.
ஆனால், நீட் உள்ளிட்ட உயர் கல்விக்கான போட்டி தேர்வு எழுத விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்காமல், எலைட் வகுப்புகள் மூலம் குறிப்பிட்ட மாணவர்களுக்கு நீட்,ஜெஇஇ பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால் நடப்பாண்டில் நடைபெற்ற முதல் சுற்று மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் அரசு பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டில் பயின்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் சுமார் 100 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.
அதே நேரத்தில் ஏற்கனவே அரசு பள்ளியில் படித்து நீட்டிற்காக தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று தேர்வு எழுதிய மாணவர்கள் 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் பயிற்சி வழங்கப்பட்டாலும், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பயிற்சியினை அளிக்கவில்லை. இதனால் நடப்பாண்டில் மீண்டும் ஏற்கனவே பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நீட், ஜெஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்,