சென்னையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தரமான கல்வி வழங்குவது குறித்து மண்டல அளவில் ஆய்வுக் கூட்டம் மேற்கொள்கிறார். தரமான கல்வி வழங்குவது குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆலோசிப்பதற்காக மண்டலத்திற்கு 20 பள்ளி தலைமை ஆசிரியர்கள், 20 ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார், துவக்க ,நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து ஆலோசனைக் கூட்டத்தில் இடம்பெற வேண்டும். 9ஆம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கும்,10ஆம் தேதி சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், 11ஆம் தேதி விழுப்புரம், கடலூர் மாவட்டத்திற்கும், 12ஆம் தேதி சென்னை ,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திற்கும், 13ஆம் தேதி திருச்சி ,கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், 16ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், 17ஆம் தேதி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தேனி மாவட்டத்திற்கும், 18ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும், 19ஆம் தேதி திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்திற்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது' என அதில் கூறப்பட்டுள்ளது.