பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, 'அரையாண்டுத் தேர்வு முடிவுற்று டிசம்பர் 24ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை காலத்தில் பள்ளி வளாகத்தில் தேவையற்ற பழுதடைந்த கட்டடங்கள், கழிவறைகள், புதர்கள் போன்றவற்றை நீக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பள்ளியில் சில வகுப்பறைகள் மழையின் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தால் அதுபோன்ற வகுப்பறைகளை சீர்ப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டடங்கள் இடிக்கப்படும்' எனப் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
எனவே அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பள்ளியில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு விட்டதை உறுதி செய்ய வேண்டும்.