தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்களுக்கு பாடநூலை இலவசமாக வழங்க வேண்டும்!

சென்னை: தனியார் பள்ளி மாணவர்களுக்கும் பாடநூலை இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவை சந்தித்து தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கத்தினர் மனு

By

Published : May 13, 2019, 8:51 PM IST

இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் அருமைநாதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மெட்ரிக் பள்ளிகளை போன்று சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக மே 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்த விவரத்தை இணையத்தில் வெளியிட வேண்டும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயக்குழுவினை அமைக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கத்தினர் மனு

தொடர்ந்து பேசிய அவர், "தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் அரசுதான் தேர்வு நடத்துகிறது. எனவே, அவர்களுக்கும் பாடநூலை இலவசமாக வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும், தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் தனி ராஜ்ஜியம் நடத்தி வருவதாக என குற்றம்சாட்டிய அவர், அதிகளவில் நன்கொடை கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை கண்காணிக்க சிறப்புப்படை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details