சென்னை: எருக்கஞ்சேரியிலுள்ள இந்தியன் வங்கிக் கிளையில் உதவி மேலாளராக கடந்த 2017 முதல் 2018ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்தவர், சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த வினோத்(33).
இவர் அங்கு பணிபுரிந்தபோது இந்தியன் வங்கிக்கிளையில் இறந்துபோன 18 பென்சன்தாரர்களின் பணம்போடாத வங்கிக்கணக்குகளை எடுத்து,
பென்சந்தாரர்களின் வங்கிக் கணக்கை வைத்து லட்சக் கணக்கில் மோசடி செய்த ஆசாமிகள் கைது பென்சந்தாரர்களின் வங்கிக் கணக்கை வைத்து லட்சக் கணக்கில் மோசடி செய்த ஆசாமிகள் கைது அதற்குப் புதிதாக ஏடிஎம் அட்டைகள் வழங்கி, வங்கிக்கணக்கிலிருந்து அவரது நண்பர் நடராஜன் என்பவர் மற்றும் அவரது உறவினர்களின் கணக்கிற்கு 47 லட்சத்து 60 ஆயிரத்து 900 ரூபாய் அனுப்பி மோசடி செய்துள்ளார்.
மோசடி ஆசாமிகள் கைது
இதுதொடர்பாக புதிதாக பொறுப்பேற்ற வங்கிக் கிளை மேலாளர் ராஜேந்திர பாபு, சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடிப் புலனாய்வுப் பிரிவில் கடந்த 2020ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். புகாரின்படி வினோத் மற்றும் நடராஜன் ஆகிய இருவரையும் கடந்த 2020ஆம் ஆண்டு மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து, வங்கி உதவி மேலாளர் வினோத் குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குக்கான விசாரணை சென்னை முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வழக்கின் புலனாய்வு முடிந்து இருவர் மீதும் 90 நாட்களுக்கு குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இருவரும் மோசடி செய்த 47 லட்சத்து 60 ஆயிரத்து 900 ரூபாய் பணத்தை மீட்டு வங்கியில் ஒப்படைத்தனர்.
சிறைத் தண்டனை
மேலும், இவ்வழக்கிற்கு நீதிமன்ற விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எழும்பூர் முதன்மை நீதிமன்ற நடுவர் முதல் குற்றவாளியான வினோத்துக்கு 15 மாதங்கள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நடராஜனிற்கு 8 மாதங்கள் சிறைத் தண்டணையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் துரிதமாகப் புலன் விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த வங்கி மோசடிப் புலனாய்வு பிரிவு அலுவலர்களை சென்னை காவல் ஆணையர் பாராட்டினார்.
இதையும் படிங்க:அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிக்கு 11 மையங்கள் தொடங்க அனுமதி