தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசைவார்த்தைக் கூறி அழைத்துச்சென்று வழிப்பறி! - வழிப்பறி

பச்சை குத்தச்சென்ற நபரிடம் ஆசை வார்த்தைக் கூறி காரில் அழைத்துச்சென்று தாக்கி அவரிடமிருந்த அமெரிக்க டாலர், ஏடிஎம் கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றைப் பறித்துச்சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆசைவார்த்தைக் கூறி அழைத்துச்சென்று வழிப்பறி!
ஆசைவார்த்தைக் கூறி அழைத்துச்சென்று வழிப்பறி!

By

Published : Aug 11, 2022, 3:23 PM IST

சென்னைமேற்கு மாம்பலம், பாலகிருஷ்ண நாயக்கர் தெருவைச்சேர்ந்தவர் பரத்வாஜ்(47). இவர் கனடாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். கடந்த 30ஆம் தேதி விடுமுறையில் சென்னை வந்த பரத்வாஜ் நேற்று மாலை வடபழனியில் உள்ள பிரபல மாலில் பச்சை குத்துவதற்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தனது பெயர் விக்கி என்றும், இங்கு பச்சை குத்தினால் நோய் வரும் என்றும், தனக்குத் தெரிந்த இடத்தில் நன்றாக பச்சை குத்துவதாக பரத்திடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பரத் அந்த நபரை காரில் அழைத்துக்கொண்டு அவர் சொன்ன இடத்திற்குச் சென்றார். மேலும் அரும்பாக்கத்தில் தனது நண்பர்கள் இரண்டு பேர் காத்திருப்பதாகவும், அவர்களையும் அழைத்துச்செல்ல வேண்டும் என பரத்வாஜிடம் கூறியுள்ளார். பின்னர் கார் அரும்பாக்கம் சென்றபோது அங்கு காத்திருந்த 3 பேர் காரில் ஏறினர்.

கார் சிறிது தூரம் சென்றதும் காரில் ஏறிய அந்த கும்பல் பரத்வாஜை சரமாரியாக தாக்கி,அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டை பறித்து வெவ்வேறு ஏடிஎம்மில் 58ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டனர். பின்னர் அந்த கும்பல் பரத்தின் கைப்பையில் வைத்திருந்த 300 அமெரிக்க டாலர், லேப்டாப், பாஸ்போர்ட், ஏடிஎம் கார்டு, ஐபோன் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு பரத்வாஜை வானகரம் சுங்கச்சாவடி அருகே காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்றனர்.

இதில் காயமடைந்த பரத்வாஜ் அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் மதன்குமார்(30) என்பவரிடம் நடந்தவற்றைக்கூறி வீட்டில் விடுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் பரத்வாஜ் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததின் பேரில் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளை கும்பலைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:ராஜஸ்தான் சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு... மீட்க சென்ற சகோதரி கடத்தல்...

ABOUT THE AUTHOR

...view details