திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. நான்காவது நாளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர். தற்போது சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணறு அருகே மற்றொரு ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது.
தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம் - கவிஞர் வைரமுத்து - சுஜித் செய்திகள்
பாறை என்பது நல்வாய்ப்பு மண்சரியாது, தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றுவோம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இந்தக் குழியில் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த வீரர்கள் இறங்கவுள்ள நிலையில் 40 அடி ஆழத்தில் பாறைகள் இருப்பதால் ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு பின்பு சரி செய்யபட்டுவருகிறது. இரண்டாவதாக வேறொரு ரிக் இயந்திரமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'அரசு எந்திரத்தையோ ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள். பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்' என்று ட்வீட் செய்துள்ளார்.