தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த வாரத்திலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. கட்சிகள் விருப்ப மனுக்கள் பெற்று வரும் சூழலில், வரும் 12ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது. சுமார் 88 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கரோனா பரவல் காலத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருப்பதால் வாக்குச்சாவடிகள், தேர்தல் பரப்புரை நடக்கும் இடங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் எடுக்க வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார்.