தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூகநீதிப் படங்கள் வணிக ரீதியாக வெற்றி - சத்யராஜ் பெருமிதம் - சத்யராஜ் பேச்சு

பெரியார், அம்பேத்கர் சித்தாந்தங்களுடைய சமூகநீதிப் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுகின்றன என சத்யராஜ் பெருமைப்பட பேசியுள்ளார்.

விழா மேடையில் சத்யராஜ் உள்ளிட்டோர் பேசுவது தொடர்பான காணொலி
விழா மேடையில் சத்யராஜ் உள்ளிட்டோர் பேசுவது தொடர்பான காணொலி

By

Published : Dec 16, 2021, 6:36 AM IST

தீரன் இயக்கியுள்ள 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 15) சென்னையில் நடைபெற்றது. இதில் சத்யராஜ், சிபிராஜ், மயில்சாமி, சந்துரு, எஸ்.ஏ. சந்திரசேகர், திலகவதி ஐபிஎஸ், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழா மேடையில் சத்யராஜ் உள்ளிட்டோர் பேசுவது தொடர்பான காணொலி

அப்போது சத்யராஜ் பேசுகையில், “வேதம் புதிது படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினையை எம்ஜிஆர் தீர்த்துவைத்தார். அதேபோன்று பெரியார் படத்திற்கும் பிரச்சினை வந்தது. பெரியார் படம் வெளியானதற்கு காரணம் சந்துரு. தணிக்கைச் (சென்சார்) சான்றிதழ்கள் தற்போது பல வடிவங்களில் உள்ளன.

அதனால் மேடையில் பேசும்போது பார்த்து பேச வேண்டியுள்ளது. பெரியார், அம்பேத்கர் படங்கள் உள்ள திரைப்படங்கள் வெற்றிபெறுகின்றன. சமூகநீதிப் படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெறுகின்றன. ஆங்கிலம் பேசுவது என்பது அறிவுக்காகத்தான்” என்றார்.

இதையும் படிங்க:எதற்கும் துணிந்தவன் முதல் பாடல் வெளியானது!

ABOUT THE AUTHOR

...view details