தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பரவல், சாத்தான்குளம் விவகாரம்: டிஜிபி சுற்றறிக்கை! - காவல்துறை இயக்குனர் திரிபாதி சுற்றறிக்கை

சென்னை: கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பு, சாத்தான்குளம் தந்தை-மகன் சந்தேக மரணம் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக அனைத்து காவலர்களுக்கும் காவல் துறைத் தலைவர் திரிபாதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

சாத்தான்குளம் விவகாரம்: அனைத்து காவலர்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை!
சாத்தான்குளம் விவகாரம்: அனைத்து காவலர்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை!

By

Published : Jun 25, 2020, 8:55 AM IST

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தந்தை ஜெயராஜ், மகன் ஃபென்னிக்ஸ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். பின்னர் காவல் துறையினர் தாக்கியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதில் காவல் துறையினர், கைதிகள் ஆகியோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மேற்கண்ட இரண்டு விவகாரங்கள் காரணமாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு காவல் துறைத் தலைவர் திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், “கைதுசெய்யப்பட்ட குற்றவாளியை உடனடியாகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல், அனைத்து காவல் நிலைய சரகத்திலும் தனியார் கட்டடம் ஒன்றை கரோனா தடுப்பு மையமாக தயார் செய்து அதில் குற்றவாளியை தனிமைப்படுத்த வேண்டும்.

அனைத்து காவலர்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை

அப்படி, தனியார் கட்டடம் கிடைக்கவில்லை என்றால் துணை கண்காணிப்பாளர் அல்லது உதவி ஆணையர் அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி பிணையில் வரமுடியாத குற்றவாளியை கைதுசெய்த பின் நீதிமன்றத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்லாமல் அறையில் வைத்து பரிசோதனைக்கு பின் அழைத்துச் செல்ல வேண்டும். குற்றவாளி அடைக்கப்பட்ட அறைகளை பாதுகாக்க காவல் ஆய்வாளர் தலைமையில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்முன் கரோனா பரிசோதனை கட்டாயமாகச் செய்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் “குற்றவாளியை கைதுசெய்து ஒரு நாளைக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என நிபந்தனை உள்ளதால் தற்போது தடுப்பு மையத்தில் அடைத்த பின்பு நீதிமன்றத்திற்கு காணொலி வாயிலாகப் பதிவு செய்து அனுப்பலாம். குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கிய பின்பு சிறைக்கு கொண்டுசெல்லும் முன்பும் குறிப்பிட்ட குற்றவாளிகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

அனைத்து காவலர்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை

கரோனா தடுப்பு மைய அறையை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். குற்றவாளியை கைதுசெய்ய செல்லும்போது காவலர்கள் பிபிஇ கிட், முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். பிணையில் வெளிவரக்கூடிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக எழுதி வாங்கி பிணையில் விட வேண்டும்” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்: நோய்த்தொற்று ஏற்படும் இடர்!

ABOUT THE AUTHOR

...view details