நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சந்தித்த படுதோல்வி, அக்கட்சியில் இருந்து பலரை இடம்பெயரச் செய்திருக்கிறது. செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் போன்ற தினகரனின் படைத்தளபதிகள் திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர். முக்கிய மாவட்டச் செயலாளர்கள் பலர் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பி விட்டனர்.
டிடிவி கட்சியில் இருந்து வெளியேறிய சசிரேகாவுக்கு அதிமுக செய்தித்தொடர்பாளர் பதவி! - அமமுக
சென்னை: அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக சசிரேகா இன்று அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இணைந்த போது
இந்த நிலையில், அக்கட்சியின் மாநில தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் சசிரேகா, அவரது கணவர் எஸ்.ஆர். பிரபுவும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
இதையடுத்து, அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக சசிரேகா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.