சென்னை:சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அங்கீகரிக்காததைக் கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர். போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் எடப்பாடி பழனிசாமி உட்பட 700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள், மாலை விடுவிக்கப்பட்டனர். பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா தான் முடிவெடுக்கும் நிலையில் இருந்தார். ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பாக மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்துள்ளது. வெறும் பாராசிட்டமலை மட்டும் டாக்டர் சிவகுமார் கொடுத்துள்ளார். இதெல்லாம் சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது என அறிக்கை கூறியுள்ளது. திமுக சர்வாதிகாரப்போக்குடன் நடந்துகொள்கிறது. போராடக்கூடிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.