தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஓபிஎஸ்ஸுக்கு சசிகலா ஆறுதல்
சென்னை: ஓ. பன்னீர்செல்வம் மனைவி மறைவுக்கு சசிகலா நேரில் சென்று பன்னீருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
ஓபிஎஸ்
இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் சசிகலா பெருங்குடிக்கு சென்று ஓ. பன்னீர்செல்வத்துக்கும் அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத்துக்கும் ஆறுதல் தெரிவித்தார். அப்போது துக்கம் தாளாமல் அழுத ஓபிஎஸ்ஸை அவரது கைகளை பற்றி சசிகலா தேற்றினார்.