தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலா மேல்முறையீட்டு மனு...ஆகஸ்ட் 30ல் விசாரணை ! - அதிமுக பொதுக்குழு

Sasikala Appeal Petition: அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 30ஆம் தேதி தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சசிகலா மேல்முறையீட்டு மனு...ஆகஸ்ட் 30ல் விசாரணை
சசிகலா மேல்முறையீட்டு மனு...ஆகஸ்ட் 30ல் விசாரணை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 7:19 PM IST

சென்னை: அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

பின்னர், சசிகலாவிற்கு கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும் , டி.டி.வி.தினகரனுக்கு இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிங்க:லதா ரஜினிகாந்த் எதிரான மோசடி வழக்கு: 'ஆட் பீரோ' நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி அவரது வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து உத்தரவை எதிர்த்து, சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். கடந்த 6 மாதங்களாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கு, இன்று (ஆகஸ்ட் 22) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி நீதிபதிகள் ஆர். சுப்ரமணியம், ஆர்.கலைமதி அமர்வில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் சார்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க:இலங்கை போதை பொருள் கும்பல் தலைவன் கைது - 10 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பின்னணி!

ABOUT THE AUTHOR

...view details