தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் நாளை தொடங்குகிறது பொங்கல் விற்பனை கண்காட்சி.. இங்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா? - chennai news in tamil

Chennai Sales Exhibition: சென்னையில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனை கண்காட்சி நாளை (டிச.21) தொடங்குகிறது என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Sales Exhibition
சென்னையில் நாளை தொடங்குகிறது பொங்கல் விற்பனைக் கண்காட்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 4:57 PM IST

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனைக் கண்காட்சி நாளை (டிச.23) தொடங்கி 2024 ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான பருப்பு வகைகள், மசாலா பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நாட்டுச் சர்க்கரை, சத்துமாவு, சுடுமண் சிற்பங்கள், கால் மிதியடிகள், பட்டு மற்றும் பருத்திப் புடவைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்லாமல் கைவினைப் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள், மிளகு, இயற்கை மூலிகைகள், செயற்கை ஆபரணங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பரிசுப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மரச் சிற்பங்கள், இயற்கை உரங்கள், தேன், கடலை மிட்டாய், மூலிகைப் பொடிகள் போன்றவையும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், திருநங்கையர் சுய உதவிக் குழுக்களும் தங்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத துணிப்பைகள், மஞ்சப்பைகள் விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய சுவை மிகுந்த உணவுகளை உண்டு களித்திட உணவு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

நாளை (டிச.23) தொடங்கி 2024 ஜனவரி 7ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு, அனுமதி இலவசம் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குடியரசு தின விழா - சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு!

ABOUT THE AUTHOR

...view details