சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்லும் பொதுமக்களிடம் தங்க நகையை குறைந்த விலையில் விற்பதாக கூறி மோசடி நடப்பதாக சாஸ்திரி நகர் காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில், தங்க நகை விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
பொதுமக்களிடம் போலி தங்க நகைகள் விற்பனை செய்த இருவர் கைது - தங்க நகை
சென்னை பெசன்ட் நகரில் குறைந்த விலையில் தங்க நகைகள் விற்பதாக கூறி, கவரிங் நகைகளை கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போலி நகைகள்
அவர்கள், பெரம்பூரை சேர்ந்த யாகூப்(23), பரோஷ் பாஷா(26) என்பது தெரியவந்தது. அவர்களின் உடமைகளை சோதனையிட்ட போது, கவரிங் நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் கவரிங் நகைகளை , தங்க நகைகள் எனக்கூறி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனையும் படிங்க: பெரியார் சொன்னதை... சீமான் செய்கிறார் - மகளிர் தினத்தில் மகத்தான பரிசு!
Last Updated : Mar 8, 2021, 4:01 PM IST