ரிசர்வ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்தும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான சிறப்பு முகாம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றுவருகிறது. அங்குள்ள ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த சிறப்பு முகாமானது நடைபெறுகிறது.
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு முகாம்! - சிட்டி யூனியன் வங்கி
சென்னை: கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் நடைபெற்றுவருகிறது.
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முகாம்
இந்த முகாமினை ரிசர்வ் வங்கியின் தென்மண்டல பொது மேலாளர் எல்.வி.எஸ். மோகன் தொடங்கிவைத்தார். முகாமிற்கு பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களிடம் உள்ள கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிச் செல்கின்றனர்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த சிட்டி யூனியன் வங்கியின் துணைப் பொது மேலாளர் ஸ்ரீதரன், இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.