தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியன் 2 பட விவகாரம்: பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிப்பு - சினிமா செய்திகள்

இந்தியன் 2 படப் பிரச்னை தொடர்பாக இயக்குநர் சங்கர் - லைக்கா நிறுவனம் இடையே பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதியை நடுவராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியன் 2
இந்தியன் 2இந்தியன் 2

By

Published : Jun 30, 2021, 2:16 PM IST

இயக்குநர் சங்கர் மீது லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ”இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தை இயக்க சங்கர் சென்றுவிட்டார். எனவே, அவர் வேறு படம் இயக்க தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தது.

இந்தியன் 2 பட போஸ்டர்

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் சங்கர் தரப்பு கருத்தை கேட்காமல் படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று முன்னதாகக் கூறியிருந்தது. இதை எதிர்த்து லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இயக்குநர் சங்கர்

இதனை தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்து தனி நீதிபதி முன்பு உள்ள வழக்கை முடித்த பிறகு மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்கலாம் என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று (ஜூன்.30) விசாரணைக்கு வந்தபோது, லைக்கா நிறுவனம் சார்பாக இந்த விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதியை நியமிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்தியன் 2 படக்குழுவினர்

இதற்கு இயக்குநர் சங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஒப்புக்கொண்டதை அடுத்து, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதியை நடுவராக நியமித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:14 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டில் ஹிட்டான ரஜினி பாடல்

ABOUT THE AUTHOR

...view details