அந்தக் கடிதத்தில், "பழைய மகாபலிபுரம் சாலையில் வேலை செய்யும் பெரும்பாலான ஐ.டி ஊழியர்கள் மின்சார ரயில் மூலம் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இறங்கி தங்களது அலுவலகங்களுக்குச் செல்கின்றனர்.
இவர்களில் டைடில் பார்க்கில் உள்ள அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வோர் திருவான்மியூர் ரயில் நிலையத்தை விட்டு கீழே இறங்காமல் ஓஎம்ஆருக்கிடையே போடப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை பயன்படுத்தி அலுவலகத்தைச் சென்றடைகின்றனர். ஆனால் ஓஎம்ஆரின் தெற்கு பகுதியில் வேலை செய்பவர்கள் திருவான்மியூர் ரயில் நிலையத்தை விட்டு கீழே இறங்கி வந்து போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையைக் கடந்து தங்களுடைய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரத்தில் இந்த சாலையைக் கடப்பது கடினமாக இருப்பதால் நேரம் விரயமாவது மட்டுமல்லாமல் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றது. எனவே, இதனைத் தடுக்க திருவான்மியூர் ரயில் நிலையத்தின் வெளியேறும் வாயிலிலிருந்து நேராக ஓஎம்ஆரைக் கடக்கும் விதமாக ஒரு நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்.
இதன் மூலம் மக்கள் ரயில் நிலையத்தை விட்டு கீழே இறங்காமல் சாலையைக் கடந்து தெற்கு ஓஎம்ஆரில் உள்ள அவர்களது அலுவலகங்களுக்குச் செல்ல முடியும். எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த நடைமேம்பாலத்தை விரைந்து அமைக்க ரயில்வே அலுவலர்களுக்கு ரயில்வே துறை அமைச்சர் ஆணையிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.