சென்னை:ஏறத்தாழ81 கோடி ரூபாய் மதிப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்துப் பணியை போற்றும் வகையில் மெரினா கடலுக்குள் பேனா வடிவில் 134 அடி நினைவுச்சின்னம் அமைக்க மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி கோரும் நடைமுறைகளை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.
கடலில் ரூ. 81 கோடியில் பேனா சிலை - மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்துக்கு மாநில பொதுப்பணித்துறை கடிதம்! - Tamil Nadu Public Works Department
கடலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா சிலை வைப்பது தொடர்பாக, CRZ அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது.
pena statue issue
திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை (EIA) மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை (TOR) கோரி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக்குழுவுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது.
இதையும் படிங்க:'கருணாநிதிக்கு ரூ.80 கோடி செலவில் பேனா நினைவுச்சின்னம் வைப்பது தவறில்லை' - கே.எஸ்.அழகிரி!