கரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அவர்களை மீட்டுவருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து சென்னை, திருச்சி, கோவை விமான நிலையம் வழியாகச் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இதுவரை ஆயிரக்கணக்கானோர் திருச்சி வந்து அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இந்தச் சூழலிலும் சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்துவது அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில் துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், இன்று (அக்.20) சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதற்றத்துடன் காணப்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய புஹாரி என்பவரை தனியே அழைத்துச் சோதனை செய்தனர். சோதனையில் உடலுக்குள் 484 கிராம் எடையுள்ள ரூ.25.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.