சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் தொகுதியில் வருவாய் வட்டம் வாரியாக விளையாட்டு மைதானம் அமைக்க அரசு ஆவன செய்யுமா என கேட்டார்.
இதற்கு பதிலளித்த விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், "விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியது தமிழ்நாடு அரசு. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்ததைப் போல், பாராஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.