தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

13 மாதங்களாக நிலுவையில் உள்ள ரூ.360 கோடியை உடனே வழங்குங்கள் - குடிநீர் திட்டப் பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்
கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : May 18, 2022, 10:09 PM IST

சென்னை: ராஜரத்தினம் மைதானம் அருகில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கூட்டு குடிநீர் திட்டப் பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டியளித்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அனைத்து ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ரமேஷ், "தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த 13 மாத காலமாக நிலுவையில் உள்ள 360 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும்.

வடிகால் வாரிய ஆணை எண் 11 மற்றும் 15- ஐ உடனே ரத்து செய்ய வேண்டும்.வடிகால் வாரியத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட செயல்திறன் அடிப்படையிலான ஒட்டுமொத்த பேக்கேஜ் டெண்டர் முறையை உடனே ரத்து செய்ய வேண்டும்.

2017ஆம் ஆண்டில் தொழிலாளர் நலத்துறையில் உள்ள விலைப்புள்ளியைக் கொண்டு நடப்பு 2022ஆம் ஆண்டுக்கு செயல்படுத்தும் முடிவை உடனே ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய விலைப்புள்ளியை கொண்டு திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட வேண்டும். ஒட்டுமொத்த பேக்கேஜ் டெண்டர் முறையின் வாயிலாக பெரிய நிறுவனங்களுக்கு துணை போகும் வாரிய முடிவை உடனே கைவிட வேண்டும்.

கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்

நீண்ட காலமாக வாரியத்தோடு துணைநிற்கும் சிறு குறு ஒப்பந்ததாரர்களை நசுக்க நினைக்கும் வாரியத்தின் முடிவை வன்மையாக கண்டிக்கிறோம். வாரிய விதிமுறைகளை தவறாகப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர்களை வெளியேற்ற நினைக்கும் வாரிய தலைமையை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்

இதையும் படிங்க:கடல் நீரை குடிநீராக்கும் திட்ட ஒப்பந்தம் முடிவு - மக்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details