தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Dvac raid: மாநிலம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. கணக்கில் வராத ரூ.34 லட்சம் பறிமுதல்! - சென்னை லஞ்ச ஒழிப்பு சோதனை

தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 16, 2023, 6:54 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் சில அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவலின் பேரில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரப்பதிவு துறை, போக்குவரத்துத்துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வணிகவரித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சார்பதிவாளர் அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககம் உள்ளிட்ட 60 அரசு அலுவலங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த திடீர் சோதனையில் அலுவலகங்களில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.33,75,773 கைப்பற்றப்பட்டது. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.1,79,000 கூகுல் பே மூலம் தனிநபருக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டதை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (தெற்கு) அலுவலகத்தில் மின் சேவைக்கு கட்டணம் வசூல் செய்த கணக்கில் பணம் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. கடலூரில் மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டதில் மனை பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவது சம்மந்தமான பணிகளை மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே கடலூர் நகரமைப்பு அலுவலகத்திற்கு இணையான தனியார் அலுவலகங்கள் இயங்கி வருவதும், அரசாங்க அலுவலகத்தில் செய்ய வேண்டிய பணிகள் மேற்கண்ட தனியார் நிறுவனங்களில் நடைபெற்று வருவதும் அரசு ஆவணங்கள் தனியார் வசம் இருப்பதும் கண்டறியப்பட்டு விசாரணைக்கு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றைபோல் மேலும் சில முறைகேடுகள் இன்று நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கண்டறியப்பட்டு முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் விசாரணைக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 7 வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.38 ஆயிரம் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்ட ஊராட்சிகளின் தணிக்கை பிரிவு உதவி இயக்குநர் அலுவலகத்தில் ரூ.1.25 லட்சமும், மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நான்கு மணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.50 ஆயிரத்து 700 ரொக்கமும், கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாமல் வைத்திருந்த 17 ஆயிரத்து 853 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ”ராஜ்பவனுக்கு சென்று ஆன்லைன் மசோதா குறித்து கேளுங்கள்” - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

ABOUT THE AUTHOR

...view details