சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 471 பேருந்து சாலைகள் மற்றும் 34640 உட்புற சாலைகள் உள்ளன. இந்தச் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள பெயர் பலகைகளில் சேதமடைந்த பெயர் பலகைகள் மற்றும் பெயர் பலகை இல்லாத சாலைகள் அல்லது தெருக்களில் மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் சாலை (அ) தெருவின் பெயர், வார்டு எண், பகுதி எண், மண்டல எண், அஞ்சல் குறியீடு கூடிய பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இந்தப் பெயர் பலகைகளில் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் போன்ற விளம்பரங்கள் செய்யக்கூடாது. அவ்வாறு விளம்பரங்கள் செய்தாலோ அல்லது பெயர் பலகையை சேதப்படுத்தினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.