சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. எனவே மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சியின் சார்பில் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை முகக்கவசம் அணியாத 2,405 நபர்களுக்கு ரூ.12,02,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
இந்த நிலையில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மாநகராட்சியின் குழுக்களின் மூலம் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 2,405 நபர்களுக்கு ரூ.12,02,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தலைமைச் செயலகத்திற்கு வந்து வழக்கமான பணிகளை தொடங்கிய முதலமைச்சர்