40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவமானது கடந்த மாதம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 48 நாட்கள் நடைபெற்றது. இதற்காக கோயிலின் 18 இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டது.
அத்திவரதர் வைபவத்தில் குவிந்த ரூ.10 கோடி காணிக்கை! - இந்து சமய அறநிலையத்துறை
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற அத்திவரதர் உற்சவத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் 10 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளார்கள் என்று இந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
அத்தி வரதர்
அத்திவரதர் வைபவம் நிறைவடைந்த நிலையில், 18 உண்டியல்களிலும் செலுத்தப்பட்டிருந்த காணிக்கைக்கள் எண்ணப்பட்டது. இதில் 10 கோடியே 60 லட்சத்து 3,129 ரூபாய் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இதை தவிர 165 கிராம் தங்கம், 5.339 கிலோகிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக சேர்ந்துள்ளது என இந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்துள்ளனர்.