சென்னை போரூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரவீன். இவர் தனது மனைவி பெயரில் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு வாங்கியுள்ளார். இதையடுத்து, எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாகக்கூறி பெண் ஒருவர் பிரவீன் மனைவியிடம் புதன்கிழமை இரவு(ஜூலை 22) தொடர்புக் கொண்டுள்ளார்.
அப்போது உங்கள் கிரெடிட் கார்டுகளில் உள்ள பாயிண்டுகளை பணமாக மாற்றி, வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவதாகக் கூறியுள்ளார். முதலில் சந்தேகப்பட்ட பிரவீனின் மனைவி, வங்கி அதிகாரி என்று போனில் பேசிய பெண்ணிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து கரோனா காரணமாக எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் வீட்டிலிருந்து வேலை செய்வதாகவும், மேலும் எந்தெந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார், எவ்வளவு கிரெடிட் கார்டுகள் வைத்துள்ளார் என்ற தகவல்கள் முழுவதையும் பிரவீன் மனைவி தெரிவித்துள்ளார்.
இதனால் நிஜமாகவே வங்கியில் இருந்துதான் தொடர்பு கொண்டுள்ளனர் என்று அவர் நம்பியுள்ளார். பின் கிரெடிட் கார்டு பாயிண்டுகள் பணமாக மாற்றுவதற்காக ஓடிபி ஒன்று அனுப்புவதாகக் பெண் வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார். பிரவீன் மனைவி அந்தக் ஓடிபி எண்னை மறுமுணையில் தெரிவித்தவுடன், சிறிது நேரத்துக்குப் பிறகு அவரது கிரெடிட் கார்டில் இருந்து சிறிது சிறிதாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.