தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’பணம் தரல உன்னை கொன்றுவேன்’ - மருந்து கடை உரிமையாளரை மிரட்டும் ரவுடி - chennai mannivakkam rowdy silambarasan

சென்னை: தாம்பரம் அருகே மருந்து கடை நடத்திவருபவரிடம் ரூ.50 ஆயிரம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த, ரவுடி சிலம்பரசனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

rowdy
rowdy

By

Published : Jul 30, 2020, 11:24 AM IST

Updated : Jul 30, 2020, 12:55 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த ஓட்டேரி காவல் எல்லைக்குட்பட்ட மண்ணிவாக்கத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வினோத்குமார் என்பவர் கஸ்தூரி மருந்தகம் என்ற கடை நடத்திவருகிறார். இவரின் மற்றொரு கடை வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட ஆர்.கே நகர் பகுதியில் உள்ளது.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் ஐந்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிலம்பு (எ) சிலம்பரசன் (30) என்பவர், கடந்த இரண்டு நாட்களாக வினோத்குமாரிடம் ரூ. 50 ஆயிரம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வினோத்குமாரிடம் சிலம்பரசன் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

ரவுடி சிலம்பு மிரட்டல் விடுத்த ஆடியோ

இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் அளித்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார். கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்கில் பலமுறை குண்டாசில் சிறை சென்று வந்த சிலம்பரசன் தற்போது மீண்டும் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளார்‌. வினோத்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஓட்டேரி காவல் துறையினர் தனிப்படை அமைத்து சிலம்பரசனை தேடி வருகின்றனர்.

மருந்து கடைகாரருக்கு ரவுடி கொலை மிரட்டல்

இதையும் படிங்க:பட்டப்பகலில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை!

Last Updated : Jul 30, 2020, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details